வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்த 6 வழிச்சாலை திட்டத்திற்காக ரூ 200.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடல்வழி போக்குவரத்திற்கு முக்கிய இடமாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. அங்குள்ள துறைமுகத்தில் இருந்து தான், வெளிநாடுகளுக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்திற்கான போக்குவரத்தை மேம்படுத்த அப்பகுதியில் ஆறு வழிச்சாலை அமைத்திட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது வருகிறது.
6 வழி சாலை:
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிக்கை: துறைமுக தளத்தை மேம்படுத்தும் முயற்சியில், தூத்துக்குடி துறைமுகச் சாலை என்.எச்- 7ஏ (புதிய என்எச்-138) பகுதியில் 6 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்போது ரூ 200.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5.16 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த திட்டம் இபிசி முறையில் செயல்படுத்தப்பட்டு நடைபெறும். தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆறுவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.