வெஸ்ட் ரீடிங்: அமெரிக்காவில் சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்; மாயமான ஆறு பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் ரீடிங் பகுதியில் தனியார் சாக்லேட் நிறுவனம் ஒன்று 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை இங்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், தொழிற்சாலை மட்டுமின்றி முன்னே இருந்த கட்டடமும் தரைமட்டமானது. இந்த விபத்தில், ஐந்து உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் மாயமாகியுள்ள நிலையில், இவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.