கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே குற்றுத்தாணி கொடிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் வினு; ஆட்டோ டிரைவர். இவரது இளைய மகன் ஸ்சான்(2) மற்றும் அருகில் உள்ள குழந்தைகள் அவர்களது வீட்டின் வழிப்பாதையில் உள்ள இடத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
குழந்தை ஸ்சான் மட்டும் காணவில்லை. குழந்தையின் பெற்றோர் பதட்டத்துடன் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மீன் வளர்ப்பதற்காக தண்ணீர் நிரப்பி வைத்திருந்த தொட்டியில் பார்த்தபோது, குழந்தை இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.