ஊட்டி: ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்பதால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், செயல்படும் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் ஆய்வு செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் படகு இல்லத்திற்கு, கடந்த ஓராண்டில், 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இங்கு, 5 கோடி ரூபாயில் பல்வேறு சாகச விளையாட்டுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
கோடை சீசனுக்கு முதல்வர் வருகை தர உள்ளார். தொட்டபெட்டா முதல் மந்தாடா வரை ரோப்கார் திட்டத்திற்கு, 4 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிதது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக பைக்காரா படகு சவாரியில் மிதவை உணவகமும் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, படகு இல்லத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், நுழைவு வாயில், படகு இல்ல நடைபாதைகளில் எவ்வித ஆக்கிரமிப்பு இருக்க கூடாது உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.