திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே புதுக்கோட்டை ரோட்டில் டூவீலர் - கார் மோதலில் வாலிபர் இறந்தார்.
திருப்புத்தூர் தம்பிப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் மகன் கணேசன் 32. இவர் சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர். விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். அடுத்த வாரம் மீண்டும் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
பெற்றோர் இல்லாததால் சகோதரர் வீட்டில் உள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை ரோட்டில் என்.புதூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் டூவீலரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. அதில் பலத்த காயமடைந்த கணேசன் இறந்தார். இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரிக்கிறார்.