கமுதி: கமுதி அருகே முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம், புண்யாகாவசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி , தீபாராதனை நடந்தது.
முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்பு கொடி மரத்திற்கு கொடியேற்றப்பட்டது. பால்குடம், அக்கினி சட்டி எடுக்கும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
ஏப்.4ம் தேதி பொங்கல் விழா, ஏப்.5ல் அக்கினி சட்டி, பால்குடம்,பூக்குழி இறங்குதல்,ஏப்.7ம் தேதி 2007 திருவிளக்கு பூஜை, ஏப்.8ம் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிம்ம வாகன அலங்காரம் சிறப்புபூஜைகள் வீதி உலா நடைபெறும் .