வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ''நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, எம்.பி., பதவியில் இருந்து ராகுல் சட்டப்படி தானாக பதவியிழந்த பிறகும் காங்கிரஸ் நடத்திய போராட்டம், அக்கட்சியின் ஆணவத்தை வெளிக்காட்டுகிறது '', என பா.ஜ., கூறியுள்ளது.
காங்கிரசின் சத்தியாகிரக போராட்டம் குறித்து பா.ஜ., செய்தித்தொடர்பாளர் சுதன்ஷூ திரிவேதி கூறியதாவது: காங்கிரசின் போராட்டம், மஹாத்மா காந்தியை இழிவுபடுத்துகிறது. தேசத்தந்தை, சமூக பிரச்னைகளுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸ், சொந்த காரணங்களுக்காக சத்தியாகிரக போராட்டம் என சொல்லி போராடுகிறது. இந்த போராட்டம் அக்கட்சியின் ஆணவத்தை வெளிக்காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரகமும், உண்மைக்கான போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகே, ராகுல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பிறகு சம்பந்தப்பட்ட சட்டப்படி ராகுல் தானாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிறகு போராட்டம் நடத்துவது எதற்கு? நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதை நியாயப்படுத்துவதற்கு அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறதா என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.