புதுடில்லி :13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, புதுடில்லியில், நடந்து வருகிறது.
இதில், 50 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நிகாத் ஜரீன் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டு முறை பட்டம் வென்ற, வியட்நாம் வீராங்கனை குயேன் தி டாமை 5-0 என்ற கணக்கில் வென்று, தங்கத்தை கைப்பற்றினார்.
ஏற்கனவே சுவீட்டிபோரா மற்றும் நிதுகங்காஸ் ஆகியோர், இரண்டு தங்க பதக்கங்களை வென்றிருந்த நிலையில், நிகாத் ஜரீன் மூன்றாவது, தங்கத்தை கைப்பற்றி உள்ளார்.
உலக மகளிர் குத்து சண்டை 75 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில், ஆஸ்திரேலியா வீராங்கனை கேட்லின் பார்க்கரை வீழ்த்தி இந்தியாவின் லவ்லினா தங்கம் பதக்கம் வென்றார். இத்துடன் உலக மகளிர் குத்து சண்டை போட்டியில் 4வது தங்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.