வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் எம்.பி., தகுதிநீக்கம் நடவடிக்கை எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க கிடைத்துள்ள ஒரு சிறந்த அரசியல் நடவடிக்கை என திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., சத்ருகன்சின்ஹா தெரிவித்துள்ளார்.
![]()
|
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: ராகுல் விவகாரம் அரசியல் ரீதியாக நிறையவே பலனளிக்கும். இது எதிர்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது ஜனநாயகத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது,வரும் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு கூடுதலாக 100 இடங்களை பெறுவதற்கு உதவக்கூடும். இதற்காக நாங்கள் மத்திய அரசை பாராட்டுகிறோம்.
![]()
|
ஆயிரம் மைல் பயணத்தை ஒரு சிறு முதல் அடியில் துவங்க வேண்டும் என்ற சீன பழமொழி போல் ராகுல் விவகாரம் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஓரு அரசியல் நடவடிக்கையாக அமைந்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது மிகவும் முக்கியமான பிரச்னை இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement