வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எம்.எல்.ஏ.,க்களை சோர் மண்டல் என்று கூறியதால் சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் ராவத்தும் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
![]()
|
மோடி என்ற சமுதாயத்தைஅவமதிப்பு செய்ததாக காங்., எம்.பி., ராகுலுக்கு சூரத் கோர்ட் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதன் அடிப்படையில் அவர் எம்.பி.,பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவேசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை திருட்டு கும்பல்கள் என குறிப்பிடும் வகையில் சோர் மண்டல் என்ற வார்த்தைய பிரயோகித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியிருப்பதாவது:மாநில சட்டமன்றத்தில் தேர்நதெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை சோர்மண்டல் என்று கூறி இருப்பதை கண்டித்து சஞ்சய் ராவத் மீது சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவருக்கு போதிய அவகாசம் தந்த பின்னர் அவர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. மேலும் அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜ்யசபா துணை தலைவருக்கு சிறப்பு தீர்மானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
சஞ்சய் ராவத் இது குறித்து கூறுகையில் ராகுலைப்போல் என்னையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது எனக்கு எதிராக செய்யப்படும் சதியாகும். இதற்காக நான் பயப்பட போவதில்லை.நான் கூறியது அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை கூற வில்லை. பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனாவை உடைத்து சின்னத்தையும் பறித்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே சோர் கும்பல் (திருடும் கும்பல்) என கூறினேன் .நான்சொல்லாத கருத்துக்கு மன்னிப்புகேட்க மாட்டேன். ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டேன் இவ்வாறு சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
![]()
|
சஞ்சய் ராவத், ராஜ்யசபாவின் சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement