வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆக்ரா:ஆக்ரா சிறையில் உள்ள கைதிகள் சைத்ராநவராத்திரி, ரம்ஜான் கொண்டாடி மகிழ்ந்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
![]()
|
இது குறித்து ஆக்ராவில் உள்ள மத்தியசிறை அதிகாரிகள் கூறியதாவது: சிறையில் சுமார் 905 கைதிகள் உள்ளனர் இரு மதங்களை சேர்ந்த கைதிகள் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். அவர்களில்17 முஸ்லீம் கைதிகள் இந்துக்கள் பண்டிகையான சைத்ரா நவராத்திரி விரதத்தை அனுசரித்தனர். 37 இந்துக்கள் கைதிகள் ராம்ஜான் ரோஜாவில் பங்கேற்கின்றனர். இது கைதிகளிடையே நேர்மறையைக் கொண்டுவருகிறது மற்றும் அவர்களை உற்சாகமாக வைத்திருக்கிறது" என்று கூறினர்.
மேலும் நவராத்திரி விரதம் இருக்கும் கைதிகளுக்கு பழங்கள் மற்றும் பால் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்துள்ளது. ரோஜாவை அனுசரிக்கும் கைதிகளுக்கு, அதிகாரிகள் நோன்பு திறக்கும் தேதிகளை ஏற்பாடு செய்துள்ளனர். என தெரிவித்தனர்.
நவராத்திரி விரதம் பற்றி முஸ்லீம் கைதிகள் கூறுகையில் சிறையில் அனைவரும் ஒற்றுமையாக, அனைவரின் மத உணர்வுகளையும் மதித்து வாழ்கிறோம். "கோவிலில் நடக்கும் பஜனைகளில் பங்கேற்று, இந்துக்களுடன் சேர்ந்து பாடுவோம். என வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறை கைதிகளின் நலனுக்காக பாடுபடும் சமூக அமைப்பான டிங்கா டிங்காவின் நிறுவனர் வர்த்திகா நந்தா கூறுகையில் , மத பண்டிகைகள் மற்றும் சடங்குகளை பரிமாறிக்கொள்ள சிறை சரியான இடம் என்றார்.
![]()
|
சைத்ரா நவராத்திரி பண்டிகையும், ரம்ஜான் பண்டிகையும் அடுத்தடுத்த நாளில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement