வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், 56. மஹராஷ்டிரா மாநிலம், மும்பை பாந்த்ராவில் கேலக்ஸி அவென்யூ என்ற இடத்தில், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு, இவரது 'இ-மெயிலுக்கு' வந்த தகவலில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, மும்பை மற்றும் லுனி போலீசார் இணைந்து விசாரித்து, ஜோத்பூர் மாவட்டம், லுனியைச் சேர்ந்த தக்காட் ராம் என்பவரை கைது செய்துள்ளனர்.