தேவகோட்டை:தேவகோட்டை அழகாபுரி நடுத்தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் சரவணன்.40., தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுகிறார் இன்று மதியம் தேவகோட்டை அருகே உள்ள கும்மங்குடிக்கு சென்று வாடிக்கையாளரை இறக்கிவிட்டு தேவகோட்டை திரும்பினார். வார சந்தை அருகே வரும்பொழுது வழியில் நின்ற டூவீலரை எடுக்கச் சொல்லி ஆட்டோவில் ஹாரன் அடித்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அருணகிரிபட்டினம் ஜெயபாண்டியன் ஆட்டோ டிரைவர் சரவணனை தாக்கியுள்ளார். ஜெயபாண்டியனுக்கு ஆதரவாக மெக்கானிக் பழனியப்பனும் சேர்ந்து சரவணனை தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்த சரவணனை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். தேவகோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.