வாரணாசி,- உத்தர பிரதேசத்தில் போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே, 25, ஹோட்டல் அறையில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
போஜ்புரி மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே. இவர், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்.
நேற்று இவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதைஅடுத்து ஹோட்டல் பணியாளர் அறைக்கு சென்று பார்த்தார்.
அங்கு அறையில் இருந்த மின் விசிறியில் துணியால் துாக்கிட்டு இறந்த நிலையில் ஆகான்ஷா தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஹோட்டல் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நடிகை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.