'போக்சோ' போலீஸ்காரர்  சிக்கினார்
'போக்சோ' போலீஸ்காரர் சிக்கினார்

'போக்சோ' போலீஸ்காரர் சிக்கினார்

Added : மார் 27, 2023 | |
Advertisement
ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர், வடக்குகாட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன், 30; பெரம்பலுார் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், தலைவாசலைச் சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கினார்.ஆத்துார் மகளிர் போலீசார், மார்ச், 24ல் போக்சோ வழக்கில் பிரபாகரனை கைது செய்து, நீதிமன்றம் அழைத்துச் செல்ல ஜீப்பில் ஏற்ற முயன்றபோது,

ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர், வடக்குகாட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன், 30; பெரம்பலுார் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், தலைவாசலைச் சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கினார்.

ஆத்துார் மகளிர் போலீசார், மார்ச், 24ல் போக்சோ வழக்கில் பிரபாகரனை கைது செய்து, நீதிமன்றம் அழைத்துச் செல்ல ஜீப்பில் ஏற்ற முயன்றபோது, போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு தப்பினார்.

தனிப்படை போலீசார் அவரை தேடினர். பிரபாகரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பங்காரம் பகுதியில், நண்பர் வீட்டுக்கு நேற்று சென்ற பிரபாகரனை, தனிப்படை போலீசார் கைது செய்து, சேலம் 'போக்சோ' நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X