வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ராகுலின் எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
![]()
|
இது குறித்து பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:
'ராகுலுக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றமும் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு, அவரது எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
![]()
|
ராகுலின் பதவியை பறித்தது அரசியலமைப்பு சட்டம் தானேயன்றி, பா.ஜ., அல்ல என்பது ஒரு எம்.பி.,க்கு தெரியாதது வியப்பளிக்கிறது. அவசரப்பட்டு இதுபோன்ற அறிக்கைகள் கொடுப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement