மும்பை: மாகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்ஷிண்டே மகாராஷ்டிரா நவ்நிர்மான்சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்தார்.
![]()
|
மகாராஷ்டிரா மாநிலம் தாதர் பகுதியில் மகாராஷ்டிரா நவ்நிர்மான்சேனா கட்சிதலைவர் ராஜ் தாக்கரே வசித்து வருகிறார். அவரை மகாராஷ்டிரா மாநில முதல்வரான ஏக்நாத்ஷிண்டே சந்தித்தார். சந்திப்பின் போது தாக்கரேவின் மனைவி ஷர்மிளா மற்றும் மகன் அமித் உடனிருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் குடிபத்வா குறித்த உரை ஒன்றை தாக்கரே நிகழ்த்தினார். இதன் பின்னர் இருவரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சிவசேனா இரண்டாக பிரிந்த பின்னர் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா பா.ஜ.,வுடன் ஆட்சி அமைந்தது.
![]()
|
இதனிடையே மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜ் தாக்கரே. புதிய ஆட்சி அமைந்த உடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வரும் பா.ஜ.,வை சேர்ந்தவருமான தேவேந்திரபட்னாவிஸ் ஆகியோர் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜ்தாக்கரேவை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.