ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.500: இங்கல்ல பாகிஸ்தானில்| A dozen bananas cost Rs.500: Not here in Pakistan | Dinamalar

ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.500: இங்கல்ல பாகிஸ்தானில்

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (14) | |
இஸ்லாமாபாத்: கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வாழைப்பழத்தின் விலை டஜன் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு உணவுப்பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து உள்ளது. அது மட்டுமல்லாது நாடு அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது. தக்காளி, கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வாழைப்பழத்தின் விலை டஜன் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.



latest tamil news


பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு உணவுப்பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து உள்ளது. அது மட்டுமல்லாது நாடு அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது.

தக்காளி, கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்ததில் கோழிக்கறி மிளகாய்தூள், கடுகுஎண்ணெய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றில் விலை சரிந்துள்ளது.

உணவு சார்ந்த 51 பொருட்களில் 26 பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. 12 பொருட்களின் விலை குறைந்துள்ளது. 13 பொருட்களின் விலை நிலையாக இருந்துள்ளது எனஅந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்நாட்டில் ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.250 முதல் 500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒருவாரத்தில் வாழைப்பழத்தின் விலை 11.07 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.


latest tamil news


பாகிஸ்தானின் புள்ளியில் கணக்கின் படி கடந்த 22 ம் தேதி உடன் முடிவடைந்த வாரத்துடன் கூடிய பணவீக்கம் ஆண்டுக்கு 47 சதவீதமாக பதிவாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X