வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான பயணியர் படகு சேவை ஏப்., 29ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரியின் காரைக்கால் வரையிலான பயணியர் படகு சேவை ஏப்., 29ல் துவங்க உள்ளது.
![]()
|
பயணியர் ஒவ்வொருவரும் 100 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இலங்கையில் இருந்து 4 மணி நேர பயணத்தில் காரைக்கால் சென்றடையலாம். இந்தியா - இலங்கையை சேர்ந்த விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு இந்த பயணியர் படகு சேவையை இயக்க வாய்ப்பு அளிக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement