அச்சுறுத்தலாக மாறியுள்ளது ஏலச்சீட்டு; நீதிபதி வேதனை

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை-'சமூகத்தில் தற்போது மாதாந்திர ஏலச்சீட்டு, அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என தெரிவித்த மாவட்ட கூடுதல் நீதிமன்றம், ஏலச்சீட்டு மோசடி வழக்கில், பெண்ணிற்கான தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை தி.நகரில் வசித்து வரும் தனலட்சுமி - சுப்புராஜ் தம்பதி, தாங்கள் வசிக்கும் பகுதியில், 2010-----, 2012ம் ஆண்டு காலத்தில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'சமூகத்தில் தற்போது மாதாந்திர ஏலச்சீட்டு, அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என தெரிவித்த மாவட்ட கூடுதல் நீதிமன்றம், ஏலச்சீட்டு மோசடி வழக்கில், பெண்ணிற்கான தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது.



latest tamil news


சென்னை தி.நகரில் வசித்து வரும் தனலட்சுமி - சுப்புராஜ் தம்பதி, தாங்கள் வசிக்கும் பகுதியில், 2010-----, 2012ம் ஆண்டு காலத்தில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களை நம்பி, அப்பகுதியைச் சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். முதிர்வு காலம் முடிந்தும், பணத்தை உரியவர்களுக்கு தரவில்லை.

இதுகுறித்து, அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில், பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர்.


நம்பிக்கை மோசடி


விசாரணையில், 43 லட்சத்து 16 ஆயிரத்து 625 ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதிக்கு எதிராக, சிட்பண்ட் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

வழக்கை, எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் விசாரித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட தனலட்சுமிக்கு, 'நம்பிக்கை மோசடிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; ஏமாற்றுதலுக்கு மூன்று ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; சிட் பண்ட் சட்டப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம்' தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தனலட்சுமியின் கணவர் இறந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தனலட்சுமி மேல்முறையீடு செய்தார்.

போலீசார் சார்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:

சமூகத்தில் தற்போது மாதாந்திர ஏலச்சீட்டு பழக்கம், அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதில், பெரும்பாலும் சாதாரண மக்கள் குறி வைக்கப்படுகின்றனர்.


latest tamil news


அதிக ஏலம் எடுத்த நபர்கள், அந்த தொகையை திருப்பித் தராததால், சீட்டு நடத்துபவர்கள், மற்றவர்களை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கும் நிலை உருவாகிறது.

ஆகையால், 'சீட்டு, பண்டு' நடவடிக்கைகள்பதிவு செய்யப்பட வேண்டும்.


தீர்ப்பு உறுதி


இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், மனுதாரரின் வயது உள்ளிட்டவை கருதி, தண்டனை காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள், 43 லட்சத்து 16 ஆயிரத்து 625 ரூபாயை செலுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-மார்-202312:06:15 IST Report Abuse
Barakat Ali பிரச்னையைத் தீர்த்து வைக்க அதிரடி தீர்ப்புகளை அளிக்க முடிந்தாலும் கூட எங்களால் வேதனைப்படத்தான் முடியும் ..... இப்படிக்கு நீதி பாதிகள் ....
Rate this:
Cancel
27-மார்-202308:53:20 IST Report Abuse
அப்புசாமி உளுத்துப் போன தண்டனை சட்டங்களை வெச்சிக்கிட்டு இன்னும் நீதி பரிபாலனம் பண்றாங்க. வேதனை தெரிவிச்சு சாதனை படைக்கிறாங்க. நீதித்துறை மேல் மக்ஜள் நம்பிக்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
27-மார்-202307:20:50 IST Report Abuse
சீனி ஒரே ஒருவன் சீட்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டால், சீட்டு நடத்துபவர்கள் நிலை பரிதாபமாக மாறிவிடும். நடத்துப்வர்களை மட்டும் குறைசொல்லி பயனில்லை. எனவே சீட்டு நடத்துபவர்கள், அரசிடம் பதிவு செய்து, முதலிடு செய்பவர்கள் ஆதார், பான்கார்டு, பணத்திற்க்கு இணையாக செக் என பத்திரமாக நடத்தினால் ஓரளவு குற்றம் குறையும். இல்லை அம்பேல் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X