புதுச்சேரி : புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களுக்கு 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டம், மதுரை தியாகராஜர் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி ஆகியன சார்பில், 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
லாஸ்பேட்டை, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி பேராசிரியர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சந்திரசேகர் ராமலிங்கம், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை பற்றி சிறப்புரையாற்றினார். திட்ட அலுவலர் நித்தியா தலைமையிலான குழுவினர் வினாடி - வினா நிகழ்ச்சியை நடத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் மதுரை, தியாகராஜர் தொழில்நுட்ப கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.