பண்ருட்டி : திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் சுவாமி கோவிலில், அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருத்துறையூர் கிராமத்தில் சிஷ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அ.ம.மு.க., பொதுசெயலாளர் தினகரன், மனைவி மற்றும் மகளுடன், நேற்று முன்தினம் இரவு வந்தார். 8 மணியளவில் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் 1008 சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள் சார்பில் திருப்பணி வேலைகளுக்கு உதவிட கோரினர். திருப்பணிக்கு உதவிடுவதாக தினகரன் உறுதியளித்தார். அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உடனிருந்தார்.