வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'பிரதமர் நரேந்திர மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி, பேசப்படாத நாயகர்கள் பலருடைய வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
![]()
|
பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் வானொலியில் பேசும், 'மனதின் குரல்' 99வது நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, தமிழக பா.ஜ., சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில், அக்கட்சியின் நிர்வாகிகள், பிரதமர் மோடியின் உரையை, பொது மக்கள் கேட்கும் வகையில். எல்.இ.டி., திரை போன்றவற்றில் ஒலிபரப்பினர்.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:
பிரதமர் மோடியின் மனதின் குரல், நம் நாட்டின் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்த, குறிப்பிடத்தக்க சாதனைகளை பேசி வருகிறது. பேசப்படாத நாயகர்கள் பலரின் வாழ்க்கையை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
![]()
|
பிரதமர் மோடி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களைப் பற்றி பேசினார்.
நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர், உடல் உறுப்பு தானம் மற்றும் உயிர்களை காப்பதில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய கடலில், படகில் அமர்ந்து மீனவர்களுடன் இணைந்து, மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement