சென்னை: 2023 -24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பில் ஆய்வகம் மேம்படுத்தப்படும்.
* 25 கோடியில் பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ தொலைவிற்கு ரூ. 55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும்.
* சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை "மக்களைத் தேடி மேயர் திட்டம்" செயல்படுத்தப்படும்.
* 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னையில் பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
* 10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்வு.