திருச்சி: மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த, கூலி தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, சவேரியார்புரத்தை சேர்ந்தவர் வில்சன் 26. கூலித் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணத்தை இழந்ததால், பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடன் தொல்லை காரணமாக, வில்சன் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன், துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மியால், தற்கொலை செய்த நிலையில், மீண்டும் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்த சம்பவம், திருச்சி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.