இந்தியாவின் 7 முன்னணி நகரங்களில், ஜனவரி - மார்ச் வரையிலான காலத்தில் வீடுகள் விலை 6 முதல் 9 சதவீதம் அதிகரித்த போதிலும், விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கான வட்டி தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் வீட்டுச்சந்தை தொடர்ந்து எழுச்சியுடன் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஒரு காலாண்டில் அதிக வீடுகள் விற்பனையாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் கன்சல்டன்ட் நிறுவனமான அனரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் 7 முன்னணி நகரங்களில், நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 770 வீடுகள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 99 ஆயிரத்து 550 வீடுகள் விற்பனையாகி இருந்தது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மொத்த வீடுகள் விற்பனையில், மும்பை, புனே நகரங்கள் மட்டும் 48 சதவீதம் பங்களிப்பை அளித்துள்ளது. மும்பை நகரத்தில் மட்டும் 19 சதவீதம் அளவுக்கு வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஜன., - மார்ச் காலத்தில், 29,130 வீடுகள் விற்பனையாகி இருந்தது. நடப்பாண்டு 34,690 வீடுகள் விற்பனையாகி உள்ளது. டில்லி புறநகர் பகுதியில் மட்டும் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது. 2022ம் ஆண்டு முதல் காலாண்டை, நடப்பாண்டு முதல் காலாண்டு வெற்றி கொண்டுள்ளது.
![]()
|
அனரோக் தலைவர் அனுஜ் பூரி கூறுகையில்,
கடந்த பத்தாண்டுகளில் முதல் காலாண்டில் அதிக வீடுகள் விற்பனையாகி உள்ளது. குறிப்பாக, ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளுக்கு தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழல் குறுகிய காலத்தில் சவால் மிக்கதாக இருக்கும்.
தொடர்ச்சியான பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதத்தை மீண்டும் உயர்த்த வாய்ப்பு ஆகியவை வரவிருக்கும் இரண்டு காலாண்டில் வீட்டுச் சந்தையின்
இவ்வாறு அவர் கூறினார்.