கடலூர்: கடலூர் அருகே மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றுகிறார். மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன்(3) என்ற குழந்தை உள்ளது.
காலை, கிழக்கு ராமாபுரத்தில் உள்ள, தாத்தா வீட்டில் தேஜஸ்வரன் விளையாடி கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. டிரைவர் தப்பியோடிய நிலையில், சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement