வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இன்று(மார்ச் 27) காலை பார்லிமென்ட் துவங்குவதற்கு முன்பாக நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் கிரண் ரிஜீஜூ, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் என பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தது. பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி வழங்குவது தொடர்பான மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.