வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மக்களின் பென்சன் பணம் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்வது ஏன் என்பது குறித்து விசாரணையும் இல்லை. பதிலும் இல்லை. பயம் ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: எல்ஐசி மூலதனம், அதானிக்கு!
ஸ்டேட் வங்கியின் மூலதனம், அதானிக்கு!
இபிஎப்ஓ அமைப்பின் மூலதனமும் அதானிக்கு!
மோடிக்கு அதானிக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பிறகும், மக்களின் ஓய்வூதிய பணத்தை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவது ஏன்?

விசாரணையும் இல்லை, பதிலும் இல்லையே பிரதமரே? ஏன் இவ்வளவு பயம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.