வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவித்து வருகிறது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை, மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை.

* 2020 -21ம் நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ரூ 1,30,988 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
* 2022 -23ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை அதிகரித்து ரூ 1,49,168 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.