வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மான வழக்கில் நாளை (மார்ச்.28) தீர்ப்பு வெளியாகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி, பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
![]()
|
இந்நிலையில், பொதுக்குழு தீர்மானம், மற்றும் பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக பன்னீர்செல்வம் சார்பில் தொடர்ந்த வழக்கில் நாளை (மார்ச்.28) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.
முன்னதாக பொதுச்செயலர் தேர்தலுக்கு தடை கோரி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி கே.குமரேஷ்பாபு முன், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.