போபால் : பூனை இனத்தைச் சேர்ந்த, சிறுத்தையில் ஆசிய, ஆப்ரிக்க என, இரண்டு இனங்கள் உள்ளன. இதில், ஆசிய வகை சிறுத்தைகள் இந்தியாவில், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மத்திய இந்திய காடுகளிலும் வாழ்ந்து வந்தன, அதிகளவு வேட்டையாடப்பட்டதால், இந்த இனம் வெகுவாக குறைந்தது.
இந்திய வனங்களில், சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆப்ரிக்க நாடான, நமீபியாவில் இருந்து, 5 ஆண், 3 பெண் என, எட்டு சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன.
அவை, கடந்தாண்டு, பிரதமர் மோடியின் பிறந்த நாளான்று, ம.பி.,யில் உள்ள குனோ தேசிய பூங்காவில், பராமரிக்கப்பட்டு வந்தன. அதில், ‛ஷாஷா' என்ற, பெண் சிறுத்தை ஒன்று, சிறுநீரக கோளாறால் இறந்துள்ளது.