2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி: அன்புமணி

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (36) | |
Advertisement
திருப்பத்துார்:2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.திருப்பத்துாரில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது; திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 48 வது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19 வது நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள்
A coalition government will be formed under the leadership of BJP in the 2026 assembly elections: Anbumani  2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,  தலைமையில் கூட்டணி ஆட்சி: அன்புமணி

திருப்பத்துார்:2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.திருப்பத்துாரில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது; திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 48 வது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19 வது நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலைக்கு காரணம் தமிழக கவர்னர்தான்.



latest tamil news

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கு தெரியாமல் விற்பதற்கு வாய்ப்பில்லை. கொரோனாவுக்கு பிறகுதான் மது விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த கட்ட இளைஞர்களை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க 17 ஆயிரம் போலீசார், ஒரு டி.ஜி.பி., என உருவாக்கப்பட்டு தடுக்க வேண்டும்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் அதிகளவு போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்தியாவிலேயே டார்கெட் வைத்து மது விற்பனை செய்யக்கூடிய, அதிக மது விற்பனையாகும், சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மற்றும் அதிக விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.


இந்தியாவிலேயே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலமாகவும், அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவற்றுக்கு காரணம் மது. தற்போது மதுக்கடைகள், பார்கள் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் அமைச்சருடைய கூட்டணி என் தெரிகிறது.மதுவால் 30 சதவீதம் வருவாய் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. மது ஒழிப்பு தான் அண்ணா, பெரியார் கொள்கை. தி.மு.க., அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையை படிப்படியாக குறைப்போம் என மேடைக்கு மேடை பேசி வந்த தி.மு.க., தற்போது ஒரு கடையை கூட மூடவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுவிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்.வரும் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதற்கு ஏற்ற 2024 எம்.பி., தேர்தலில் யூகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

RAJ -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202314:33:39 IST Report Abuse
RAJ இன்னுமா ஆசை உங்களுக்கு. இப்படி பேசிப்பேசியே உங்களுக்கும் வயதாகி விட்டது உங்கள் அப்பாவுக்கும வயதாகி விட்டது அவரால் பேசக்கூட முடியவில்லை.
Rate this:
Cancel
28-மார்-202312:24:53 IST Report Abuse
ஆரூர் ரங் கள்ளச்சாராய தயாரிப்பு அதிகமாக நடப்பது வட மாவட்டங்களில் தான். சாதி மக்கள்மீது பாமக வுக்கு உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமானால் இந்நேரம் அது அறவே ஒழிக்கப்பட்டிருக்கும் . ஆனால் உள்ளூர் கட்சித் தலைவர்களே அதில் ஈடுபட்டுக் கொண்டுள்ளதால் டாஸ்மாக்கை மட்டும் எதிர்க்கிறார்கள்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202311:17:20 IST Report Abuse
venugopal s உருப்படியாக ஒன்றுமில்லாத பாஜகவே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆசைப் படும் போது பாமக ஆசைப்படுவது தவறில்லை!
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
28-மார்-202313:04:09 IST Report Abuse
Paramanஅதென்னமோ உண்மை தான்... உருப்படியா எதுவுமே இல்லாத ஊழல் கட்சி திராவிடியா தீயமூக்காவே பித்தலாட்டம் செய்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளபோது மற்றொமொரு பித்தலாட்ட ஜாதி கட்சி பாமாகா ஆசைப்படுவதில் தவறில்லை தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X