புதுடில்லி: நாட்டில் 21 ‛கிரின்பீல்ட்' விமான நிலையங்களை அமைக்க, மத்திய அரசு கொள்கை அளவில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ள விமான நிலையத்தை, கிரீன்பீல்ட் விமான நிலையமாக அமைப்பதற்கான, ‛தள அனுமதி' வழங்க கோரி, தமிழக அரசு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
இந்த விண்ணப்பம், இந்திய விமான நிலைய ஆணையரகம், விமான போக்குவரத்து இயக்குனரகம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின், பரீசிலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.