அம்ரித்பால் நேபாளத்தில் பதுங்கல்? கைது செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்!

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
காத்மாண்டு : காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நிலையில், 'அவரை, வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம்' என, நேபாள அரசை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரும், தீவிரவாத போதகருமான அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, அம்ரித்பால் மற்றும் அவரது
Amritbal lurking in Nepal? The central government urged to arrest!  அம்ரித்பால் நேபாளத்தில் பதுங்கல்? கைது செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காத்மாண்டு : காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நிலையில், 'அவரை, வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம்' என, நேபாள அரசை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரும், தீவிரவாத போதகருமான அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, அம்ரித்பால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


அமிர்தசரஸ், ஹரியானா, புதுடில்லி உட்பட பல்வேறு இடங்களில், தன் அடையாளங்களை மாற்றியபடி சுற்றித் திரிந்த அம்ரித்பால், தற்போது நம் அண்டை நாடான நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்ரித்பால் இங்கிருந்து வேறுநாடு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என நேபாள அரசை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகம், நேபாள குடியேற்றத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் இருந்து தப்பிய அம்ரித்பால், தற்போது நேபாளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர், வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம். இந்திய பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் வாயிலாக வேறு நாட்டுக்கு செல்வது தெரியவந்தால், உடனடியாக கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து விமான நிலையங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட முக்கிய இடங்களுக்கு அம்ரித்பாலின் புகைப்படம் மற்றும் விபரங்களை அனுப்பியுள்ள நேபாள அரசு, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

nv -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202310:03:44 IST Report Abuse
nv தப்பிக்க விடப்பட்டார்? வெட்கக்கேடு, பஞ்சாப் காவல் துறைக்கு.
Rate this:
Cancel
RAAJ -  ( Posted via: Dinamalar Android App )
27-மார்-202323:51:43 IST Report Abuse
RAAJ நேபாளம் கூப்பிடு தூரத்தில் உள்ளது தமிழ்நாடு அளவு தான் இருக்கும் இது தனி நாடு அந்தஸ்து எதற்கு என்று புரியவில்லை. இந்திய நாட்டு பூமியின் தொடர்ச்சி தான் நேபாளம். உத்தரப்பிரதேசம் Gorakpur il இருந்து இரண்டு மணி நேரத்தில் தரை மார்க்கமாக நேபால் பார்டரை அடைந்து விடலாம். விசா தேவை இல்லை. நேபாளத்தை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும். இந்தியாவில் இருந்து நேபால் செல்லும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வரும் ஆயிரம் ரூபாய் நேபால் பார்டரில் கொடுக்க வேண்டும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள் சரியான வருமானம். சுற்றுலா செல்லும் பயணிகளின் விவரங்கள் ஆதார் கார்டு காப்பி பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. விமானத்தில் சென்றாலும் இதே procedure। எனவே அம்ரித் பால் நேப்பாளம் சென்றிருந்தால் கண்டிப்பாக நேபாள நாட்டுக்கு தெரிந்திருக்கும் அவர் சுற்றுலா பயணி போல் சென்றிருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X