ராமநாதபுரம்-ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட வேண்டும்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் தொடர்ந்து மனு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று மனநலம் பாதித்த 45 வயது மதிக்கதக்க நபர், நான்தான் அந்தகால மகாத்மா காந்தி எனக்கூறி மனுஅளிக்க வந்தார்.
அவரை போலீசார் தடுத்தனர். இருப்பினும் தொடர்ந்து கூச்சலிட்டதால் வேறுவழியின்றி மனு அளிக்க அனுமதித்தனர்.
அந்தநபரும் பெயரை பதிவு செய்து மனு அளித்தார். இம்மாதிரியான நபர்களை கண்டறிந்து மனநலம் காப்பக்கத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.