பரமக்குடி--பரமக்குடி வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை சுந்தரராஜ பெருமாள், கருப்பணசாமி, பால ஆஞ்சநேயர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு பாத்தியான இக்கோயிலில் மார்ச் 24ல் வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து கும்ப கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, 5 ம் காலயாக பூஜைகள் துவங்கி, தொடர்ந்து 10:05 மணிக்கு வானத்தில் கருட பகவான் வட்டமிட, 'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் துடுகுச்சிநாகநாதன், பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.