கீழக்கரை--கீழக்கரை நகராட்சியில் உள்ள வீடுகளில் கிணறு, தண்ணீர் தொட்டிகளில் சுகாதாரத்துறை சார்பில் மருந்து ஊற்றுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களாக 'அபேட்' எனப்படும் மருந்துகள் ஊற்றப்படாமல் இருந்துள்ளனர். நீரில் இருந்து கிருமித் தொற்று ஏற்படுவதை தவிர்க்க நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுகிறது. எனவே கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் கிணறுகளில் மருந்து ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நகராட்சி பணியாளர்களால் வீடுகள் தோறும் மருந்துகள் கிணறுகளில் ஊற்றும் பணி நடந்தது.