ராமநாதபுரம்--ராமநாதபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், சூட்டை தணிக்கும் தர்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயற்கை குளிர்பானங்களான தர்பூசணி, பழச்சாறு, இளநீர், உடலை குளிர்ச்சியாக்கும் கம்மங்கூழ், மோர் விற்பனை கடைகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக தர்பூசணி பழங்கள் செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, மரக்காணம், வந்தவாசி, மேல்மருவத்தூர், திருவண்ணாமலை பகுதியிலிருந்து ராமநாதபுரத்துக்கு விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கின்றனர். விலையை பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.