சிவகங்கை-
திருப்புத்துார் அருகேயுள்ள கண்டரமாணிக்கத்தில் மஞ்சு விரட்டு நடத்த அனுமதிக்கவேண்டி ஐந்து கிராம மக்கள் சார்பில் கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் மனு கொடுத்துள்ளனர்.
மனுவில் தெரிவித்திருப்பதாவது: கண்டரமாணிக்கத்திற்குட்பட்ட தெற்குப்பட்டு, பொன்னாங்குடி, கொங்கரத்தி, கே.வலையபட்டி கிராமங்கள் உள்ளன. ஐந்து கிராமங்களும் இணைந்து நாட்டு மஞ்சுவிரட்டு பல ஆண்டு காலமாக நடத்தி வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதி பெற்று நடத்தி வருகிறோம். இந்தாண்டும் ஐந்து கிராம மக்களும் இணைந்து ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.