காளையார்கோவில்-காளையார்கோவில் அருகே ஆ.சிரமம் கிராமத்தில் கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடைபெற்றது.
இக்கோயில் 300 ஆண்டு பழமையானது. இக்கோயில் புனரமைப்பு பணி செய்து, கும்பாபிேஷகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மார்ச் 23 அன்று காலை 9:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜைகளுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்கின.
தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் முதல் 5 ம் கால பூஜைகள் வரை நடந்தது. மார்ச் 27ல் காலை 6:35 மணிக்கு ஆறாம் கால பூஜைகளுடன், கோபூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. கோயில் அறங்காவலரும், மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளருமான சுப.குமரேசன் கொடி அசைத்து கும்பாபிேஷகத்தை துவக்கி வைத்தார். ராஜகோபுர கலசத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றினார். அனைத்து கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர்.
மதியம் 12:00 மணிக்கு மகாஅபிேஷகம், பிரசாதம் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கொங்கேஸ்வரர் கோயில் டிரஸ்ட், கிராம பொதுமக்கள், கோயில் பூஜாரிகள் செய்திருந்தனர்.