அலங்காநல்லுார்--மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் உள்ளது.
இதன் முன்பு தேங்கும் குப்பை, கழிவுநீரால் சுகாதார கேடு, விபத்து அபாயம் உள்ளது. அதலை ரோட்டில் துணை சுகாதார நிலையம், சித்த மருத்துவ மையம், தபால் அலுவலகம், மகளிர் குளியல் தொட்டி அடுத்தடுத்து உள்ளன.
இப்பகுதி வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் சுகாதார நிலையம் அருகே குளம்போல் தேங்கியுள்ளது. குளியல் தொட்டிக்கு பெண்கள் செல்ல பாதை இல்லை. மழை நேரங்களில் மையத்திற்குள் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. அதலை ரோட்டில் செல்வோர் தடுமாறினால் புதைகுழியாக மாறிய கழிவுநீர் கால்வாயில் விழ வாய்ப்புள்ளது. இந்த அவலத்தை போக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.