வடலூர் : குறிஞ்சிப்பாடி தி.மு.க., அலுவலகத்தில் வடலூர், குறிஞ்சிப்பாடி நகர தி.மு.க.,செயற்குழு கூட்டம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி தொகுதி பொறுப்பாளர் பெருநற்கிள்ளி முன்னிலை வகித்தார்.
வடலூர் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைத்தல்,உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சேர்மன்கள் வடலூர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி கோகிலாகுமார், நகர செயலாளர்கள் தமிழ்செல்வன்,ஜெய்சங்கர், துணை செயலாளர்கள் பழனி, சேகர், துணை சேர்மன் ராமர்,மாவட்ட பிரதிநிதிகள் பழனி, கோவிந்தராஜ், ஷாகுல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.