கடலுார் : நிலத்தை மீட்டு தரக்கோரி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மகனுடன் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு, பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்த சக்தி, 42; என்பவர் தனது மகனுடன் மனு அளிக்க வந்திருந்தார். திடீரென அவர், மகனுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த 5 பேர் அபகரித்து, போலி பத்திரம் தயாரித்து அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.
அந்த பெண்ணை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.