பேரையூர்--மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பேரையூர். இம்மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர் அய்யர் ஓடை வழியாக இரட்டை கண்மாய்கள் எனப்படும் இச்சிகுளம், பெரியகுளம் கண்மாய்களுக்கு செல்லும்.
இதன் மூலம் பேரையூர் பகுதியின் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசனப்பணிகள் நடக்கும்.
மழைக்காலங்களில் மறுகால் பாய்ந்து, விருதுநகர் மாவட்ட பகுதி கண்மாய்களுக்கும் நீர் செல்லும். இந்த ஓடை பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் முற்புதர் மண்டி கிடக்கிறது.
ஓடையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதனால் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். புதருக்குள் இருக்கும் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்கு விசிட் அடிப்பதால் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.
ஓடையை தூர்வார மாவட்ட நிர்வாகம் பேரூராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.