வடலூர் : வடலூர் அருகே 108 ஆம்புலன்சில் சென்ற பெண்ணிற்கு நடுவழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
வடலூர் அருகே வெங்கட்டன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கட்டையன் மனைவி கண்ணம்மா 22; இவர் நேற்று பிரசவ வலி காரணமாக வடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு
108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிபேட்டை கிராமம் வழியாக சென்ற போது, கண்ணம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே டிரைவர் தமிழ்மணி ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
உடன் வந்த நர்ஸ் சுதா, தொழில்நுட்ப உதவியாளர் தேன்மொழி உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில் கண்ணம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.