புதுச்சேரி : கோரம் இல்லாதால் சட்டசபை 45 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபை கூட்டத் தொடரில் 11 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் மட்டுமே சபை தொடர்ந்து நடக்கும். ஆனால் மானிய கோரிக்கையின்போது லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,பேசு முயன்றபோது சபையில் கோரம் இல்லை. 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர்.
அப்போது, கூட்டத் தொடரை வழிநடத்திய துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வர அழைப்பு விடுத்தார். ஆனால் எம்.எல்.ஏ., க்கள் வரவில்லை. இதனையடுத்து சபையை 12 மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒத்தி வைத்தார். தொடர்ந்து 12.45 மணிக்கு மீண்டும் சபை கூடி, மானிய கோரிக்கை மீது தொடர்ந்து விவாதம் நடந்தது.