கடலுார் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.
தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயிணி முன்னிலை வகித்தனர். ஆலோசகர் பாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில் மண்டல இணை செயலாளர் சீனுவாசன், மாவட்ட துணை தலைவர்கள் தாமோதரன், சாந்தகுமார், இணை செயலாளர்கள் வாசுகி, உமா மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும், நடைமுறை சிரமங்களை களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் பேரணி நடக்கிறது.
அதன்படி, அன்றைய தினம் கடலுார் ஜவான்ஸ்பவன் சாலையில் இருந்து பழைய கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, கலெக்டரிடம் மனு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.