பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூர் அம்பிகா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளியின் பொருளாளர் சந்தானம் தலைமை தாங்கினார். விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் ரேகாபாணு வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பள்ளியில் நடந்த கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் பாராட்டி, பரிசு வழங்கினார்.
ஆசிரியை வெற்றிச்செல்வி நன்றி கூறினார்.