திருநெல்வேலி : திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டது.
ஆறு தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து 1211 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிந்தது.
அதன் மதிப்பு ரூ.3 கோடி. நேற்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் மாவட்ட எஸ்.பி. சரவணன் ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பொத்தையடியில் அசெப்டிக்ஸ் சிஸ்டம் எனும் நிறுவனத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டன.